மின்னஞ்சல் என்பது மின்னணு தொடர்பு சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றினை செய்கின்ற முறையாக காணப்படுகின்றது. சாதாரணமாக அஞ்சல்களை அனுப்பும்போது யாரிடம் இருந்து யாருக்கு அனுப்புவது என்ற விடயம் இருக்கும். அதுபோல மின்னஞ்சல் பெறுபவரின் முகவரியும் இதற்கு தேவை. ஆனால் இந்த முகவரி நாமாக உருவாக்கிய முகவரி ஆகும்.
ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடமாற்ற தரக்குறி முறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள் பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை கொண்டிருந்தது. உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு 6 கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றில் 97 சதவீதமானவை விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஆகும்.
இன்றைய இணைய உலகில் பல நிறுவனங்கள் இலவசமாக மின்னஞ்சல்களை உருவாக்கியுள்ளது. இதில் முதன்மை நிறுவனமாக கூகுள் காணப்படுகின்றது. இந்த இணைய மின்னஞ்சல் முகவரியை ஆரம்பிக்க ஒரு பெயரினை வைத்து நீங்கள் ஆரம்பிக்கலாம். அத்துடன் இதற்கு நீங்கள் கடவுச்சொல்லை வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஜிமெயில் மூலம் பல்வேறுபட்ட தரவுகள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், அவசர கடிதங்கள் போன்றவற்றினை அனுப்பவோ பார்க்கவோ முடியும். அனைத்துவிதமான கணக்குமுறைகளை பெற்றுக்கொள்ள மற்றும் அனுப்பவும் முடியும். இதன் காரணமாக மின்னஞ்சல் சர்வதேச அளவில் முக்கியம் பெறுகின்றது.
ஜிமெயில் முகவரியினை எந்த காரணத்துக்காகவும் மாற்ற முடியாது. ஆனால் அதன் கடவு சொல்லினை நாங்கள் மாற்ற முடியும். எமது செய்திகளின் பாதுகாப்பு கருதி இந்த கடவு சொல்லினை நாம் மாற்றியமைக்கலாம். வேறு யாரும் எமது கடவுச்சொல்லினை அல்லது ஜிமெயில் மூலம் உருவாக்கிய சமூகவலை தளங்களை பார்வையிட நேரிட்டால் எமக்கு அது செய்தியாக உடனுக்குடன் வரும். இதன் மூலம் நாங்கள் எமது பாதுகாப்பினை தக்கவைத்துக்கொள்ள முடியும்.


No comments:
Post a Comment